Tuesday, 27 August 2013

ரூபாயின் வீழ்ச்சி

அன்பு நண்பர்களே,

தலைப்பை எழுத நினைத்தவுடனே  எண்ணத்த புதுசா  சொல்ல  என்ற நினைப்பிலே சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன். 


முதலில் நமது மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறிய வீழ்ச்சிக்கான காரணங்களை பாப்போம்.



இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைய உள்நாட்டு இறக்குமதியாளர்களே காரணம்: 

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளிமார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம். இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றும் முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து திட்டங்களையும் திட்டமிட்டபடி தொடர நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி துறையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் துரித கதியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 மின் திட்டங்களை தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். 

இந்திய ரூபாயின் மதிப்பை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு வர பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று சிதம்பரம் கூறினார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால் தான் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

மேலே பர்ர்த்த இரண்டு கருத்துகளை வைத்து பார்க்கும் போது , இவர்கள் இதுவரை நடவடிக்கை எடுத்து விட்டர்களா,  நடவடிக்கை எடுக்க போகிறார்களா, நடவடிக்கை எடுப்பார்களா அல்லது இந்த நிலைமைதான் நீடிக்குமா என்று மறைமுகமாக கூற விளைகிறார்களா என்ற ஐயம் எல்லோருக்கும் வருகிறது

அடுத்ததாக , அவர் கூறியது 

பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டிருந்த ரூ.1,82,997 கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார். இதன் மூலம் திட்டங்களை செயல்படுத்த வங்கிகளிடமிருந்து மூலதனம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். முதலீடுகள் கிடைக்க தொடங்கிய பின்னர் பொருளாதார நிலையில் மாறுதல் ஏற்படும் என்று சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தய ரிசர்வ் வங்கியின் மீட்பு நடவடிக்கைகள்:

இந்திய ரூபாயின் மதிப்பு தினம்தோறும் சரிவடைந்து வருவதை அடுத்து ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்திடம் 200 டன் தங்கத்தை அடமானம் வைக்கப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏறுமுகமாக உள்ளதோடு இறக்குமதி நிறுவனங்களுக்காக அமெரிக்க டாலரின் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளதாகும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு நீடிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அடுத்ததாக  திட்டக்குழு துணை தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா அவர்களின் கருத்துக்கள்:

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை தடுக்க  அத்யாவசிய செலவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், அரசு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், உணவு பாதுகாப்பு மசோதாவால் அரசு பெரும் நிதிச்சுமையை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளநிலையில், இறக்குமதியாகும் பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை சரிந்து வருகின்றன.  இந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல், தென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் போன்ற நாடுகளில் இருந்து சன் பிளவர் ஆயில் இறக்குமதி ஆகிறது. தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதால், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. இதன் விலைகள் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது அதேநேரம் உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் யாவரிடமும்  பிரச்சனையை  தீர்பதற்கான ஒருமித்த கருத்து  நிலவுவதாக தெரியவில்லை.   

 ஆனால் எங்கள்  குடுமியில் கைவைத்து விடார்தீர்கள் என்று கெஞ்ச  வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment