Monday, 9 September 2013

Commodity Trading Tips for the day (10/09/2013)

Previous call:

buy copper : 471.00
Stop loss: 462
Target : 473
Time (11.05 am)
Hold : Intraday

Please exit from the copper since the copper target has been achieved.

Present rate of the copper : 473
Profit Rs. 2000
Time (12.30 pm)

Commodity Trading Tips for the day (10/09/2013)

Buy copper : 471.00
Stop loss: 462
Target : 473
Time (11.05 am)
Hold : Intraday

Monday, 2 September 2013

Commodity Trading Tips for the day (03/09/2013)

Previous Call:

Buy Crudeoil : 7185
Stop loss: 7155
Target : 7210
Time (10.10 am)
Hold : Intraday

Please Exit from the Crude oil since the target has been achieved.


Present Rate for Crude oil : 7210



Profit for Curde oil : Rs. 2500

Time: 11:58 pm


Commodity Trading Tips for the day (03/09/2013)

Buy Crudeoil : 7185
Stop loss: 7155
Target : 7210
Time (10.10 am)
Hold : Intraday
இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.

பொருளாதாரத்தை காத்த கலாச்சாரம்

அன்பு நண்பர்களே தலைப்பை பார்த்தவுடனே ஒரு இனம் புரியாத குழப்பம் எல்லோருக்கும் ஏற்படும்.

நமது பொருளாதாரத்திறக்கும், கலாசாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். நமது தற்போதைய மோசமான பொருளாதாரதம் மற்றும் மோசமான நிர்வாகம் இவை இரண்டும் அதிகப்படியான அளவில் இருந்தும் இந்தியா இண்ணும் சோமாலியா போன்ற ஆசிய நாடுகளைப் போல் திவால் ஆகவில்லையே, ஏன் ?

இந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து காப்பற்றியது எது?

நிதிப்பற்றாக்குறையை  சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது?

1, ரிசர்வ் வங்கிக்கும், வர்த்தக வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மற்றும் 
2. பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டு வைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது. 

கடந்த ஓராண்டில் இந்தியர்கள்  வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு பொருளாதாரத்தல் இருந்து இந்தியப் 
பொருளாதாரத்தை காத்தது. 

ஆனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது?

இந்த விசயத்தில் இது வரை  சொல்லப்படாத  உண்மை இதோ?
குடும்ப செலவுகளுக்காக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாகும் நிலையில் இருந்து  காத்து வருகிறது என்பதுதான் இந்த அதிர்ச்சி கலந்த உண்மையாகும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்திய குடும்பங்களின் பங்களிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு சமமானதாகும். 

இந்த பணத்துக்கு  வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விழங்கும் இந்தப் பணம், பொருளாதார கோட்பாடுகளாலோ அல்லது அரசின் கொள்கைகையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாச்சாரம் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு கிடைத்த பரிசு இது.

நவீன கால தனி மனிதத்துவத்துக்கு எதிராக போராடிவரும் ஒருங்கினைங்ந்த இந்திய குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்த தொகை கிடைத்திருக்காது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் உற்றார், உறவினர்களை பாதுகாக்க இந்த தொகையை அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்திய பொருளாதாரத்திற்கு வாழ்வாதாரமாக உள்ள 335 பில்லியன் டாலர் வராமல் போயிருக்கும். அது மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசையே சேர்ந்த்திருக்கும்.

பொருளாதாரத்திற்கு கலாச்சார ரீதியாக பாதுப்பு அளிக்கும் இந்த நடைமுறைக்கு இந்திய அரசு நிர்வாகம் ஏப்போதாவது கவனித்திருக்கிறதா.?

உறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாச்சார ரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளைப் போல் ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமில்லை.

எந்த ஒரு அரசும் இவர்களைப் பற்றி சொன்னதும் இல்லை?

ஆனால் அந்திய முதலீடுகளை மட்டும் தம்பட்டம் அடித்து வருகிறது. ஏனென்றால் இவற்றில் தான் இவர்களுக்கு லாபம் அதிகம்.

இப்போது படிப்படியாக இந்த கலாச்சாரமும் சீரழிந்தது வருகிறது, என்பது மிகவும் வருத்தத்திற்குரியது...

முடிந்த வரை உறவுகளையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்போம்.
பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்.

தினமணியில்   வெளியான குருமூர்த்தி அவர்களின் கட்டுரையின் அடிப்படையினிலே மேலே கூறியவற்றை பதிவு செய்திருக்கிறேன். ஆகவே அவர்களுக்கு எனது நன்றியை சமர்பிக்கிறேன்.

Tuesday, 27 August 2013

Commodity Trading Tips for the day (29/08/2013)

Buy copper at : 508.90
Stop loss : 490.50
Target : 520
Hold : Intraday
Time: 10.15 

Buy Aluminium at : 128.30
Stop loss : 121
Target : 132
Hold: Intraday
Time: 10.15 

இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும். 

ரூபாயின் வீழ்ச்சி

அன்பு நண்பர்களே,

தலைப்பை எழுத நினைத்தவுடனே  எண்ணத்த புதுசா  சொல்ல  என்ற நினைப்பிலே சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன். 


முதலில் நமது மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறிய வீழ்ச்சிக்கான காரணங்களை பாப்போம்.



இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைய உள்நாட்டு இறக்குமதியாளர்களே காரணம்: 

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளிமார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம். இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றும் முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து திட்டங்களையும் திட்டமிட்டபடி தொடர நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி துறையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் துரித கதியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 மின் திட்டங்களை தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். 

இந்திய ரூபாயின் மதிப்பை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு வர பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று சிதம்பரம் கூறினார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால் தான் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

மேலே பர்ர்த்த இரண்டு கருத்துகளை வைத்து பார்க்கும் போது , இவர்கள் இதுவரை நடவடிக்கை எடுத்து விட்டர்களா,  நடவடிக்கை எடுக்க போகிறார்களா, நடவடிக்கை எடுப்பார்களா அல்லது இந்த நிலைமைதான் நீடிக்குமா என்று மறைமுகமாக கூற விளைகிறார்களா என்ற ஐயம் எல்லோருக்கும் வருகிறது

அடுத்ததாக , அவர் கூறியது 

பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டிருந்த ரூ.1,82,997 கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார். இதன் மூலம் திட்டங்களை செயல்படுத்த வங்கிகளிடமிருந்து மூலதனம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். முதலீடுகள் கிடைக்க தொடங்கிய பின்னர் பொருளாதார நிலையில் மாறுதல் ஏற்படும் என்று சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தய ரிசர்வ் வங்கியின் மீட்பு நடவடிக்கைகள்:

இந்திய ரூபாயின் மதிப்பு தினம்தோறும் சரிவடைந்து வருவதை அடுத்து ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்திடம் 200 டன் தங்கத்தை அடமானம் வைக்கப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏறுமுகமாக உள்ளதோடு இறக்குமதி நிறுவனங்களுக்காக அமெரிக்க டாலரின் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளதாகும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு நீடிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அடுத்ததாக  திட்டக்குழு துணை தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா அவர்களின் கருத்துக்கள்:

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை தடுக்க  அத்யாவசிய செலவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், அரசு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், உணவு பாதுகாப்பு மசோதாவால் அரசு பெரும் நிதிச்சுமையை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளநிலையில், இறக்குமதியாகும் பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை சரிந்து வருகின்றன.  இந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல், தென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் போன்ற நாடுகளில் இருந்து சன் பிளவர் ஆயில் இறக்குமதி ஆகிறது. தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதால், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. இதன் விலைகள் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது அதேநேரம் உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் யாவரிடமும்  பிரச்சனையை  தீர்பதற்கான ஒருமித்த கருத்து  நிலவுவதாக தெரியவில்லை.   

 ஆனால் எங்கள்  குடுமியில் கைவைத்து விடார்தீர்கள் என்று கெஞ்ச  வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

Commodity Trading Tips for the day 27/08/2013

Previous Call:
Time: 11.00 hrs
Buy copper at : 480
Stop Loss : 475
Target : 483
Hold : Intraday

Target has been achieved: Copper reached to 483

Profit Rs: 3000
Time: 13.30 hrs


Monday, 26 August 2013

Commodity Trading Tips for the day 27/08/2013

Buy copper at : 480
Stop Loss : 475
Target : 483
Hold : Intraday 
இது எங்களின் தனிப்பட்ட் ஆய் வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களையே சாறும்.  

Sunday, 25 August 2013

இன்றைய வளரும் தலைமுறையினருக்கு வேண்டுகோள்

அன்பு நண்பர்களே, நான் சுட்டிக்காட்ட விரும்புவது  கண்டிப்பாக யாரைப்பற்றிய  குறை மற்றும் நிறைகள் இல்லை. நான் நம் சமூகத்தை எதிர் நோக்கிய அனுபவத்தின் ஒரு கருத்து பகிர்வு மட்டுமே. 

வெறும் பணத்தை பற்றிய கவுகளும், அதை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது மட்டுமே தங்களின் தலையாய கடமையாய் கொண்டு உள்ளனர் நம்  பெரும்பான்மை  வளரும் தலைமுறையினர்.  சிலர் சேவைகள்  மற்றும் இதர துறைகளில் சாதித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

எனக்கு ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் நன்கு அதை அனுபவிக்க கேளிக்கை விடுதிகளும் மற்ற சமாச்சரங்களும் இருக்கின்றன. நான் பிறந்த இந்த சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவும், இதனை சற்று திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்கின்றனர். இதற்கேற்றாற்போல் வீட்டிற்கு ஒரே பையன் என்று செல்லமாக வளர்த்து, அவனுக்கு சமுதாய சிந்தனையையும் பொதுவுடைமை கருத்தையும் புகட்டாமல் வளர்த்து வருகின்றனர் அவர்களது பெற்றோர்கள்.

நகரமயமாதல் வளர்ச்சியின் காரணமாக பெரும்பான்மை கிராமங்கள் வேலையின்மையின் உச்சத்தை எட்டியிருக்கிறது.  மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால்.பெரும்பான்மை கிராமங்கள் இளைஞர்களே இல்லாத கிராமமாக இருக்கிறது.  தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலையின்மை காரணமாக ஒட்டு மொத்த இளைஞர் கூடமும் நகரை நோக்கி படை எடுக்கின்றன.  

இளைஞர்களே இல்லாத கிராமத்தில் வளர்ச்சி என்பது நிச்சயமாக சாத்திய கூறு இல்லாத ஒன்றாகும். நான் அதற்காக எல்லாரும் கிராமத்தில் தான்  வேண்டும் என்று சொல்ல வில்லை.  ஆனால் தொலைநோக்கு பார்வை உள்ள ஒரு பெருத்த இளைஞர் சமூகம் தன்னுடைய சிந்தனை,ஆற்றல் மற்றும் செய்யல்பாடு ஆகியவற்றை கிராமத்தின் மீது செலுத்தினால் மட்டுமே கிராமத்தின் வளர்ச்சி மேம்படும்.

 வேலை நிமித்தின்  காரணமாக நான்  தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். 
கிராமத்தின் தற்போதைய நிலைமை, பெரும்பான்மை நகர மக்கள் தங்கள் கற்பனை உள்ளது போல பசுமை எங்கும் நிலவவில்லை.   தங்கள் கற்பனை உள்ள சுடுகாடைப் போல் தான் உள்ளது.  
 தென் மாவட்டங்களின்  சில கிராமங்களை சென்று பார்வையிட்டால் நான் சொல்வதின் ஆழ் அர்த்தம் புரியும். 
இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்பினை கிராமத்தில் பெருக்க நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது. அழிவின் விழிம்பில் உள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

மகாத்மா சொல்லியது போல் கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு.  கிராமத்தின் உண்மையான வளர்ச்சி மட்டுமே நாட்டின் உண்மையான வளர்ச்சியாக கருத முடியும்.  

வாழ்க இவ்வையகம். வளரட்டும் நம் கிராமங்கள்.

யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பிடித்திருந்தால் கருத்து சொல்லவும். 

(அரசியல் பொருளாதாரம் பொய் ஏழைகள் இந்தியா)

படித்ததில் பிடித்தது 

மாதம் மும்மாரி பொழிகிறதா? 

புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அரண்மனையின் அந்தப்புரத்தை விட்டு வெளியே வராத அந்தக்காலத்து மாமன்னர்கள், மந்திரிமார்களைப் பார்த்து “மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்ட கதையாகத் தான் இருக்கிறது நம்முடைய பிரதமரின் பேச்சு.
புவனேஸ்வரத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 92வது ஆண்டு மாநாட்டில் பேசும் போது பிரதமர் தன்னுடைய புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறிய அதே நேரத்தில், வறுமையை ஒழிப்பதில் நமது இலக்கை இதுவரை எட்டமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
வறுமை ஒழிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி நேரு காலத்திலிருந்தே கோஷம் கொடுத்து வருகிறது. இந்திரா காந்தி அவசரநிலைக் காலத்தின் போது, ‘வறுமையே வெளியேறு’ என்று கூட கோஷம் கொடுத்தார். ஆனால் வறுமை வெளியேறியபாடில்லை. மாறாக வறுமையில் வாடும் மக்கள் தொகை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
பொருளாதார புள்ளிவிவரங்களில் பல்வேறு மோசடிகளை செய்துவரும் மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோட்டை தீர்மானிப்பதிலும் மோசடி செய்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவே வறுமைக் கோட்டு அளவுக்கான மதிப்பீட்டை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் பிரதமர் மன்மோகன் சிங் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல குறைந்து வருகிறது என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். அப்போதுதான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற பளபளப்பான வார்த்தை விளையாட்டுகளோடு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக வெகுவாக அதிகரித்து, அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலை அலங்கரிக்கத் துவங்கியுள்ளனர். மறுபுறத்தில் கடன் சுமைகாரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதை ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய அரசு பின்பற்றி வரும் கேடுகெட்ட பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படவில்லையென்று நெஞ்சாரா பொய் உரைக்கிறார். அதிகரித்து வரும் வேலையில்லாப் பட்டாளம், பட்டினிச் சாவுகள் என கண்முன்னால் தெரிகிறது இவரது புதிய பொருளாதாரக் கொள்கையின் லட்சணம்

Copy from :http://lightink.wordpress.com/.

Thursday, 22 August 2013

பங்கு சந்தை, பொருள் சந்தை, மற்றும் பண சந்தை பற்றிய தற்போதைய நிலவரம் (Equity, Commodity & Currency market current status)

பொருள் சந்தையின் (COMMODITY  MARKET) தற்போதைய நிலவரம்:

Date : 22/08/2013
TIME 10.53 pm 

GOLD : 3141 ஆகையால் GOLD லிருந்து வெளியேறவும் 
PROFIT FOR 1 GRAM-க்கு RS 26 



COPPER  : 470 ஆகையால் COPPER லிருந்து வெளியேறவும் 
PROFIT FOR 1 LOT -க்கு RS 8000 


சுப்பிரமணியன். இ ரா 
நிர்மல் பங்க்  கமாடிடி 
திருப்பூர் 
9789981416



பங்கு சந்தை, பொருள் சந்தை, மற்றும் பண சந்தை பற்றிய தற்போதைய நிலவரம் (Equity, Commodity & Currency market current status)

பங்கு சந்தை: (SHARE MARKET )


பங்கு சந்தையின் தற்போதைய நிலவரம் அதாவது நிபிட்டி (NIFTY ) 5402 ஆக மதியம் 3 மணி அளவில் இருக்கிறது. இது 5750 இல் இருந்து வேகமாக இறங்கிய சந்தையாகும். 

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையின் படி தற்போது நிபிட்டி ஏறுமுகமாக இருக்கும். ஆனால் இந்த  ஏற்றம் நிரந்தரமானது அல்ல.

டாலர்ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஆய்வு செய்யும் போது நிபிட்டி(NIFTY ) வரும் வாரங்களில் இறங்குவதற்கான வாய்புகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

ஆகவே பங்கு சந்தை முடலீளர்கள் இன்னும் காத்திருந்து சிறிது சிறிதாக பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

அப்படி எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ASHOKLEY

13.15

ATLANTA

27.90

BHUSANSTL

454

DOLPHINOFF

64.50

ESSARPORTS

62.20

HINDPETRO

187.75

JBIPL

2.45

ICICIBANK

856.70

JBFINO

85

KCP

25.35

KOTAKPSUBK

225

SBIN

1630

STYABS

347.10

SUNTECK

340

UNIONBK

120.90

VIDEOIND

172

MRPC

29.20


இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.


பண சந்தை: (CURRENCY MARKET)


பண சந்தையை பொறுத்த வரை தற்போதைய 22/08/2013 மதியம் 03.15இன் படி 
64.85 ஆக இருக்கிறது.  

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையின் படி வரும் நாட்களில் ஏறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. 

ஆகையால் வாங்குவதற்கான உகந்த தருணம் இது.   இது 67 அல்லது 68 வரை 
ஏறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.

பொருள் சந்தை: (COMMODITY  MARKET )


அமெரிக்க டாலர்க்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் அனைத்து 
உலோகங்களும்(METALS ) ஏறுமுகமாகவே இருகிறது. 

தங்கம்:


தற்போதைய  நிலவரப்படி தங்கம் இறங்குவதற்கான வாய்புகள் அதிகம். 

இவை 3176-க்கு  கீழே இறங்குவதற்கான வாய்புகள் அதிகம். இதற்கு கீழே விற்பனை செய்து தங்களுடைய இலக்கை முடிவு செய்யவும்.
STOP LOSS  3185 இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

COPPER: 


தற்போதய நிலவரப்படி 481 ஆக இருக்கிறது. இவை 478-க்கு கீழே இறங்கும் பட்சத்தில் விற்பனை செய்யலாம்.  S /L 484  இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

இலக்கின் முடிவை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.

இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.
நங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டோம்.

மரங்களை வெட்டுங்கள்

மனதோடு மட்டும்...: மரங்களை வெட்டுங்கள்