அன்பு நண்பர்களே தலைப்பை பார்த்தவுடனே ஒரு இனம் புரியாத குழப்பம் எல்லோருக்கும் ஏற்படும்.
நமது பொருளாதாரத்திறக்கும், கலாசாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். நமது தற்போதைய மோசமான பொருளாதாரதம் மற்றும் மோசமான நிர்வாகம் இவை இரண்டும் அதிகப்படியான அளவில் இருந்தும் இந்தியா இண்ணும் சோமாலியா போன்ற ஆசிய நாடுகளைப் போல் திவால் ஆகவில்லையே, ஏன் ?
இந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து காப்பற்றியது எது?
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது?
1, ரிசர்வ் வங்கிக்கும், வர்த்தக வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மற்றும்
2. பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டு வைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது.
கடந்த ஓராண்டில் இந்தியர்கள் வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு பொருளாதாரத்தல் இருந்து இந்தியப்
பொருளாதாரத்தை காத்தது.
ஆனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது?
இந்த விசயத்தில் இது வரை சொல்லப்படாத உண்மை இதோ?
குடும்ப செலவுகளுக்காக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாகும் நிலையில் இருந்து காத்து வருகிறது என்பதுதான் இந்த அதிர்ச்சி கலந்த உண்மையாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்திய குடும்பங்களின் பங்களிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு சமமானதாகும்.
இந்த பணத்துக்கு வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விழங்கும் இந்தப் பணம், பொருளாதார கோட்பாடுகளாலோ அல்லது அரசின் கொள்கைகையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாச்சாரம் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு கிடைத்த பரிசு இது.
நவீன கால தனி மனிதத்துவத்துக்கு எதிராக போராடிவரும் ஒருங்கினைங்ந்த இந்திய குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்த தொகை கிடைத்திருக்காது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் உற்றார், உறவினர்களை பாதுகாக்க இந்த தொகையை அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்திய பொருளாதாரத்திற்கு வாழ்வாதாரமாக உள்ள 335 பில்லியன் டாலர் வராமல் போயிருக்கும். அது மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசையே சேர்ந்த்திருக்கும்.
பொருளாதாரத்திற்கு கலாச்சார ரீதியாக பாதுப்பு அளிக்கும் இந்த நடைமுறைக்கு இந்திய அரசு நிர்வாகம் ஏப்போதாவது கவனித்திருக்கிறதா.?
உறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாச்சார ரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைப் போல் ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமில்லை.
எந்த ஒரு அரசும் இவர்களைப் பற்றி சொன்னதும் இல்லை?
ஆனால் அந்திய முதலீடுகளை மட்டும் தம்பட்டம் அடித்து வருகிறது. ஏனென்றால் இவற்றில் தான் இவர்களுக்கு லாபம் அதிகம்.
இப்போது படிப்படியாக இந்த கலாச்சாரமும் சீரழிந்தது வருகிறது, என்பது மிகவும் வருத்தத்திற்குரியது...
முடிந்த வரை உறவுகளையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்போம்.
பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்.
தினமணியில் வெளியான குருமூர்த்தி அவர்களின் கட்டுரையின் அடிப்படையினிலே மேலே கூறியவற்றை பதிவு செய்திருக்கிறேன். ஆகவே அவர்களுக்கு எனது நன்றியை சமர்பிக்கிறேன்.